Friday, 11 February 2011

இன்றும் என்றும் ஜீவிக்கிறார்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 12-ம் தேதி - வெள்ளி கிழமை
இன்றும் என்றும் ஜீவிக்கிறார்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். - (மாற்கு 16:6).

மூன்று மனிதர்கள் மற்றவர்களுக்கு விரோதமாக குற்றம் செய்தார்கள் என்று விசாரிக்கப்பட்டார்கள். இருவர் தவறு செய்திருந்தனர் ஒருவர் எந்த தவறும் செய்யவில்லை.

மூன்று பேரும் அரசாங்கத்தால் விசாரிக்கப்படடனர், இருவருக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை விதிக்கப்பட்டது ஒருவருக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை.

மூன்று பேருக்கும் சிலுவை சுமக்க கொடுக்கப்பட்டது இருவர் அதை சுமக்கும்படி தவறு செய்திருந்தனர். ஒருவர் அதை சுமக்கும் அளவு எந்த தவறும் செய்யவில்லை.

மூன்று பேரையும் கிண்டல் செய்து அவர்கள் மேல் துப்பினர், இருவர் திரும்ப திட்டி சபித்து, அவர்கள் மேல் திரும்ப துப்பினர், ஒருவர் அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொணடார்.

மூன்று பேரையும் சிலுவையில் ஆணிகளால் அறைந்தார்கள், இருவர் அதற்கு பாத்திரராயிருந்தார்கள்,ஒருவர் அதற்கு எந்தவிதத்திலும் பாத்திரராயிருக்கவில்லை.

மூன்று பேரும் சிலுவையில் தொங்கும்போது பேசினர், இருவர் வாக்குவாதம் செய்தனர், ஒருவர் அப்படி வாக்குவாதம் செய்யவில்லை.

மூன்று பேரும் மரணம் வரும் நிச்சயித்திருந்தனர், இருவர் அதை எதிர்த்தார்கள், ஒருவர் எதிர்க்கவில்லை.

மூவரும் சிலுவையில் மரித்தார்கள், மூன்று நாட்கள் கழித்து இருவருடைய கல்லறைகளில் அவர்களுடைய உடல் இருந்ததுஒருவருடைய உடல் அங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்தார் ஆமென் அல்லேலூயா!

உலகத்திலே வந்த எந்த மனிதனிலும், மனிதனாய் உலகத்தில் வந்து அவதரித்த தெய்வமாகிய கிறிஸ்துவே மரித்து உயிர்த்தெழுந்து இன்னும் ஜீவிக்கிறவராக இருக்கிறார். அவர் ஜீவிப்பதால் நாம் ஜீவிக்கிறோம். அவர் ஜீவிப்பதால் நாளைய தினம் குறித்து கவலையோ பயமோ நமக்கு இல்லை. ஏனென்றால் நம்முடைய எதிர்காலமும், நம்முடைய வாழ்க்கையும் அவருடைய கரத்தில் இருக்கிறது. அதனால் நாம் வாழுகிற வாழ்க்கைக்கும் பிரயோஜனமுண்டு. நாம் நமக்கு வருகிற எந்த பிரச்சனைகளைக் குறித்தும் கலங்கி தவிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய வாழ்க்கை அவருடைய கரத்தில் இருப்பதால் அவர் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வை நமக்குத் தருவார்;. நாம் விசுவாசத்தோடு அதை அவரிடம் கேட்க வேண்டும். அப்போது அவர் நமக்கு நன்மையாய் எல்லாவற்றையும் மாற்றித் தருவார். ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’. - (ரோமர் 8:28). இந்த சத்தியம் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டால் போதும், நம்மை எதுவும், யாரும் அசைக்கமுடியாது.

எல்லாம் நன்மையாக என் இயேசு மாற்றிடுவார்
தாங்கொண்ணா துன்ப துயரங்கள்
தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்
எல்லாம் நன்மையாக என் இயேசு மாற்றிடுவார்



ஜெபம்
எங்கள் மேல் கண்களை வைத்து ஆலோசனை சொல்லும் எங்கள் நல்ல தகப்பனே, உம்மைத் துதிக்கிறோம். இயேசுகிறிஸ்து தமக்கு வந்த எந்த துன்பத்திலும் வாய்த்திறவாமல் எல்லாவற்றையம் சகித்து எங்களுக்காக சிலுவை சுமந்து, எங்களுக்கு வாங்கிக் கொடுத்த இரட்சிப்பிற்காக ஸ்தோத்திரம். அவர் உயிரோடு எழுந்தபடியால், நாங்கள் இன்று ஜீவிக்கிறோம். எங்களது துன்பமான சூழ்நிலைகளையும் அவர் நன்மையாக மாற்றி எங்களை ஆறுதல்படுத்தி ஆசீர்வதிக்கிறதற்காக ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
இத்தாலி (Italy) தேசத்திற்காக ஜெபிப்போமா? italy

1) பல துறைகளில் தன்னிறைவு பெற்ற இத்தேசத்தில் தேவனுடைய ஆளுகை உண்டாக ஜெபிப்போம்.


2) இத்தேசத்தில் தேவனுக்கு விரோதமாக நடக்கும் காரியங்கள், தொலைகாட்சி சம்பவங்கள் இத்தேசத்தை விட்டு நீங்க ஜெபிப்போம்.


3) இத்தேசத்தில் நடக்கும் ஊழியங்களை தேவன் தாமே இன்னும் அதிகரித்து ஆத்தும அறுவடையை காண ஜெபிப்போம்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment